வெளிப்புற தாக்கத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்


வெளிப்புற தாக்கத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்
x

வெளிப்புற தாக்கத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

பிரபல தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

எல்லா அமைப்புகளும் சிறப்பானவை அல்ல... ஆனால், நாம் வடிவமைத்த அமைப்புகளில் சிறந்த அமைப்பு இது தான் (நீதித்துறையில் கொலியியம் அமைப்பு). அதன் நோக்கம் நீதித்துறையில் சுதந்திரத்தை பாதுகாப்பதாகவும். வெளிப்புற தாக்கத்தில் இருந்து நீதித்துறையை நாம் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

கொலிஜியம் அமைப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story