தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது: பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது: பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது என்றும், பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

ஷில்லாங்,

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும். இளைஞர்கள், ெபண்கள், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் கனவுகளை திரிணாமுல் காங்கிரஸ்தான் நனவாக்கி வருகிறது.

மேகாலயாவில், மக்களுக்காக, மக்களால், மக்களின் அரசை அமைக்க விரும்புகிறோம். பா.ஜனதா கட்சி இரட்டை முகம் கொண்டது. தேர்தலுக்கு முன்பு ஒன்று சொல்லும். தேர்தலுக்கு பிறகு வேறு எதையாவது செய்யும். பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி கொடுக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை ஆதரியுங்கள் என்று அவர் பேசினார்.


Next Story