தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட தொடக்க விழா: உஸ்பெகிஸ்தான், துருக்கி குழுவினருடன் எல்.முருகன் சந்திப்பு


தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட தொடக்க விழா: உஸ்பெகிஸ்தான், துருக்கி குழுவினருடன் எல்.முருகன் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 2:30 AM IST (Updated: 1 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

உஸ்பெகிஸ்தானில் நடந்த தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் உஸ்பெகிஸ்தான், துருக்கி குழுவினருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சந்திப்பு மேற்கொண்டு, திரைப்பட பணிகளில் கூட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

திரைப்பட தொடக்க விழா

டெல்லியில் நடந்த 15-வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட தொடக்க விழவில், இந்தியா சார்பில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். இந்தியக் குழுவில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான உமேஷ் மெஹ்ரா, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி ஒசோத்பெக் நாசர்பெகோவை, இணை மந்திரி எல்.முருகன் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் அப்போது குறிப்பிட்டு பேசினர். மேலும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

துருக்கி குழு

இந்த சந்திப்பின்போது இந்தியாவின் ஆடியோ விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு எல்.முருகன் விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து கூட்டுத் தயாரிப்பு, படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்கு பிந்தையப் பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது என இந்த சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் தாஷ்கண்ட் திரைப்பட விழாவின் போது, கலாசாரம் மற்றும் சுற்றுலா துணை மந்திரி பி.மும்கு தலைமையிலான துருக்கிய தூதுக்குழுவை, எல்.முருகன் சந்தித்து பேசினார். இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்தும் துருக்கி தரப்புக்கு இந்தச் சந்திப்பின்போது விளக்கி கூறப்பட்டது.


Next Story