பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் ஊடுருவல் இருமடங்கு அதிகரிப்பு - எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் ஊடுருவல் இருமடங்கு அதிகரிப்பு - எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
x

டிரோன்கள் கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள மின்னணு சிப்களைக் கொண்டுள்ளன.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன்கள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த பத்து மாதங்களில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 266 டிரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அதில் 215 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 22 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) டிரோன்களை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள முகாமில் அதிநவீன ஆய்வகத்தை அமைத்துள்ளது.இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) இயக்குநர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில், ''2022ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து வரும் டிரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்துள்ளது.டிரோன்கள் கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள மின்னணு சிப்களைக் கொண்டுள்ளன.

சுட்டு வீழ்த்தப்படும் டிரோன்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். கடந்த 2020ம் ஆண்டில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 79 டிரோன்களை பிஎஸ்எப் கண்டறிந்துள்ளது. 2021ம் ஆண்டில், 109 ஆக அதிகரித்துள்ளது; இந்த ஆண்டு மட்டும் 266 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 215 டிரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், 22 டிரோன்கள் ஜம்மு எல்லையிலும் ஊடுருவின'' என்றார்.


Next Story