அசாமில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், 5 பேர் கைது
அசாமில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், செய்யப்பட்டதுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அசாம்,
அசாமின் கரீம்கஞ்ச் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களில் இருந்து நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு ரகசிய தகவலின் பேரில், கரீம்கஞ்ச் போலீசார் அசாம்-மிசோரம் எல்லையில் ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை மறித்து அதில் சோதனை செய்ததில், வாகனத்தில் இரகசிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 477 கிராம் எடையுள்ளஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சர்வதேச சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பர்பதர் காவல் நிலையத்திற்குட்பட்ட காக்ரஜனில், அண்டை மாநிலமான நாகாலாந்தின் திமாபூரில் இருந்து வந்த வாகனத்தில் இருந்து 477 கிலோ கஞ்சாவை காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் சேர்ந்து கைப்பற்றி இது தொடர்பான நபர்களிடம் இருந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.