பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் ஓடும் ரெயில் இருந்து வீசி கொடூர கொலை - அதிர்ச்சி சம்பவம்


பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் ஓடும் ரெயில் இருந்து வீசி கொடூர கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் ஓடும் ரெயில் இருந்து வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் பதிஹாபாத் மாவட்டம் மன்தீப் கவுர் (வயது 30) நேற்று இரவு தனது 9 வயது மகனுடன் ரொக்டக் நகரில் இருந்து தொஹனா நோக்கி பயணிகள் ரெயிலில் பயணித்தார்.

அவர் பயணித்த பெட்டியில் மதுபோதையில் சந்தீப் என்ற நபர் ஏறினார். இரவு நேரம் என்பதால் ரெயில் பெட்டியில் மன்தீப் கவுர், அவரது மகன் மட்டுமே பயணித்துள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்திகொண்ட சந்தீப், ரெயிலில் தனியாக பயணித்த மன்தீப் கவுரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மன்தீப் கவுர் எதிர்ப்பு தெரிவிக்கவே மதுபோதையில் இருந்த சந்தீப் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் சந்தீப்பும் ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ரெயில் தொஹனா ரெயில் நிலையத்திற்கு வந்தடைய அங்கு காத்திருந்த மன்தீப் கவுரின் கணவர் ஹர்ஜிந்தர் சிங் தனது மகன் மட்டும் அழுதுகொண்டு ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்குவதை கண்டார்.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த ஹர்ஜிந்தர் அம்மா எங்கே என்று மகனிடம் கேட்டுள்ளார். அப்போது, நடந்த சம்பவத்தை தந்தையிடம் அந்த சிறுவன் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஜிந்தர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு ரெயில்வே தண்டவாளத்தில் தேடினார்.

அங்கு தனது மனைவி மன்தீப் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சற்று தொலைவில் சந்தீப் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.

இதையடுத்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து ஓடும் ரெயில் இருந்து கீழே தள்ளியை நபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story