வறுமை காரணமாக மல்பே மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 16 சிறுவர்கள் மீட்பு


வறுமை காரணமாக மல்பே மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 16 சிறுவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:30 AM IST (Updated: 4 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வறுமை காரணமாக மல்பே மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 16 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

மங்களூரு;


உடுப்பி அருகே மல்பே மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தில் வறுமை காரணமாக 16 சிறுவர்கள் வேலை செய்து வருவதாக குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர்நலத்துறையினர் உள்ளிட்டோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை அதிகாரிகள், மல்பே மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 16 சிறுவர்கள் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 16 பேரையும் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர். இதில் 11 பேர் சிறுமிகள் ஆவார்கள்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் கொப்பல், தாவணகெரேயை சேர்ந்தவர் ஆவார்கள். விசாரணையில், வறுமை காரணமாக அவர்கள் மீன்பிடிதுறைமுகத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.


Next Story