மைசூரு தசரா ஊர்வலத்தில் 43 அலங்கார ஊர்திகள், 50 கலை குழுவினர் கலந்து கொள்கிறார்கள்


மைசூரு தசரா ஊர்வலத்தில்  43 அலங்கார ஊர்திகள், 50 கலை குழுவினர் கலந்து கொள்கிறார்கள்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா ஊர்வலத்தில் ௪௩ அலங்கார ஊர்திகள் மற்றும் 50 கலை குழுவினர் கலந்து கொள்கிறார்கள் என்று தசரா கமிட்டி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மைசூரு:

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா ஊர்வலம் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்தின் துணை கமிட்டி தலைவர் ஜோகி மஞ்சு கூறியதாவது:- கர்நாடகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் ஒவ்வொரு கலாச்சார புகழ்பெற்ற கோவில்கள், சுற்றுலா தளங்கள் உள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு ஒரு புகழ்பெற்ற இடம் என்ற வீதம் 31 அலங்கார ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தசரா விழா குழு சார்பில் 3 ஊர்திகள், மைசூரு பல்கலைக்கழகம், மின்சாரத்துறை, சமூக நலத்துறை சார்பில் தலா ஒரு ஊர்தி உள்பட என மொத்தம் 43 அலங்கார ஊர்திகள் தசரா ஊர்வலத்தில் இடம் பெறுகிறது.

அலங்கார ஊர்திகள் ஊர்வலம் முடிந்த பின்னர் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட தசரா யானைகளுடன் 50-க்கும் அதிகமான கலை குழுவினரும் பங்கேற்கிறார்கள் என்றார்.


Next Story