மணிப்பூரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு


மணிப்பூரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு
x

மணிப்பூர் மாநிலத்தில் ரிக்டர் 4.5 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் மொய்ராங் என்ற பகுதியில் இன்று காலை 10.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மொய்ராங்கிற்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் பெரிய அளவிலான சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் நின்றனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் குலுங்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


Next Story