மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
நோனி (மணிப்பூர்),
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதன் நீளம்: 93.66, ஆழம்: 25 கிமீ இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்த்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
முன்னதாக பிப்ரவரி 19ஆம் தேதியன்று, ஒரு நிலநடுக்கம் ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகமா நகரைத் தாக்கியது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நாளில், ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவான ஒரு நிலநடுக்கம் மத்தியப் பிரதேசத்தையும் தாக்கியது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, பூகம்பம் இந்தூருக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் மதியம் 1 மணியளவில் தார் பகுதியைத் தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.