அமலாக்கத்துறை அலுவலகத்தை அமைத்துக்கொள்ள என் வீட்டை தர தயார் - பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்


அமலாக்கத்துறை அலுவலகத்தை அமைத்துக்கொள்ள என் வீட்டை தர தயார் - பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்
x

அவர்களுக்கு அமைதி கிடைக்கும் எனில் அதற்கு தான் அனுமதிக்க தயார் என பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னா,

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு பயப்படுவதைத் தவிர்த்துவிட்டு, அவர்கள் விரும்பினால் தனது வீட்டில் அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் அவர்களுக்கு அமைதி கிடைக்கும் எனில் அதற்கு தான் அனுமதிக்க தயார் என பீகார் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணை முதல்-மந்திரி தேஜஸ்வி பிரசாத் யாதவ் இன்று தெரிவித்தார்.

இதுவும் அவர்களுக்கு நிம்மதியை தரவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கேலியாக கூறியுள்ளார். மேலும் பீகார் மக்களின் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட தயார் எனவும் கூறினார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அரசு நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தேஜஸ்வி பிரசாத் யாதவ் மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார்.


Next Story