ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு; 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், பணமோசடி தொடர்பான வழக்கில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வால் உள்பட சிலர் மேற்குவங்காளம், ஜார்க்கண்டில் ராணுவம், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தனை செய்தும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், ராணுவம், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மேற்குவங்காளம், ஜார்க்கண்டில் அமலாக்கத்துறையில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றனர். 2 மாநிலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story