டெல்லி முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


டெல்லி முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
x

டெல்லி முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி,

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிம்ஹவ் குமார் வீட்டில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அமலாக்கத்துறையை இன்று காலை 10 மணிக்கு வெளிப்படுத்துவோம் என்று ஆம் ஆத்மி மந்திரி அதிஷி மெர்லின் தெரிவித்திருந்த நிலையில் அக்கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story