ஏக்நாத் ஷிண்டே திடீர் டெல்லி பயணம்


ஏக்நாத் ஷிண்டே திடீர் டெல்லி பயணம்
x

மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீரென டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடந்த ஆசாடி ஹா அம்ரித் மகாத்சவ் தேசிய கமிட்டி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிதி அயோக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இருப்பினும் மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது டெல்லி பயணத்துக்கும், மந்திரி சபை விரிவாக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதேவேளையில் மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்க தாமதம் காரணமாக அரசின் செயல்பாடுகளில் பாதிப்பு எதுவும் இல்லை. மந்திரிகளுக்குரிய அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு. அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார், "டெல்லியில் இருந்து கிரின் சிக்னல் கிடைக்கும் வரை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாது, இந்த விஷயத்தில் இது தான் எளிமையான கணக்கு" என்று விமர்சனம் செய்தார்.


Next Story