பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம்  நோட்டீஸ்
x

ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,, தெலுங்கானா சத்தீஸ்கர்மற்றும் மிசோரம் என 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே, டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசி வருவதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி தலைமையிலான பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


Next Story