இந்திய தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரிக்கு அனுப்பிய சம்மன் ரத்து


இந்திய தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரிக்கு அனுப்பிய சம்மன் ரத்து
x

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் தேதியை மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் தேதியை மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் தேதி மாற்றியதாக வழக்கு

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பெலகாவி மாவட்டம் அதானி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மகேஷ் குமட்டள்ளி வெற்றி பெற்றிருந்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ரவி சிவப்பா சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். இந்த இடைத்தேர்தல் விவகாரம் தொடா்பாக கா்நாடக ஐகோர்ட்டில் ரவி சிவப்பா ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், அதானி தொகுதிக்கு 2019-ம் ஆண்டு அக்டோபரில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால் பல காரணங்களுக்காக 2019-ம் ஆண்டு டிசம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், அதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் கூறி இருந்தார்.

சம்மன் ரத்து

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி, இந்திய தேர்தல் தலைமை முன்னாள் அதிகாரியான சுனில் அரோராவிடம் விசாரிக்க அவருக்கு சம்மன் வழங்கி உத்தரவிட்டு இருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளான கிருஷ்ணபட், கிருஷ்ணா எஸ்.தீக்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோராவுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story