உத்தரவாத திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரைவு குழு தகவல்


உத்தரவாத திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரைவு குழு தகவல்
x

உத்தரவாத திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரைவு குழு தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

உத்தரவாத திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரைவு குழு தெரிவித்துள்ளது.

5 உத்தரவாத திட்டங்கள்

கா்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் ெவற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் 'கிரக ஜோதி' திட்டம், 'கிரக லட்சுமி' திட்டத்தின் கீழ் இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000, 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பி.பி.எல். அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 'யுவநிதி' திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3,000 மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூ.1,500, 'சக்தி' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்து, முதலாவது மந்திரிசபை கூட்டத்தில் அவை நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தது.

பா.ஜனதா தலைவர்கள்

இந்த நிலையில் காங்கிரசின் வெற்றிக்கு இந்த உத்தரவாத திட்டங்கள் முக்கிய பங்காற்றியதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்றினால் அரசின் நிதிநிலை திவாலாகும் என்றும், இதனால் காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்றும் பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றினால் கர்நாடக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.50 ஆயிரம் கோடி

இதுகுறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரைவு குழுவின் துணை தலைவர் ராதாகிருஷ்ணா கூறுகையில், நாங்கள் அளித்த 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். அதற்கு மேல் செலவாகாது. இதனை என்னால் உறுதியாக கூற முடியும். எங்களால் இந்த திட்டங்களை உறுதியாக செயல்படுத்த முடியும். கர்நாடக அரசின் மொத்த பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடியாகும். நல்ல பொருளாதாரத்தின் வருவாயில் குறைந்தபட்சம் 60 சதவீதம் நிதி வளர்ச்சிக்காக செலவிடப்படுகிறது. மீதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.

5 உத்தரவாதங்களில் அன்னபாக்யா ஏற்கனவே உள்ள திட்டமாகும். நாங்கள் முன்பு 7 கிலோ அரிசி கொடுத்தோம். அதனை பா.ஜனதா 5 கிலோவாக குறைத்தது. தற்போது நாங்கள் 10 கிலோ கொடுக்க உள்ளோம். அரிசியுடன் சிறு தானியங்களும் வழங்குகிறோம். இது அரிசி மற்றும் தினை சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

சோலார் கிளஸ்டர்

கர்நாடகத்தில் உபரி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5,000 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சோலார் மின் பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய சோலார் கிளஸ்டர் அமைக்கப்படும். இது கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன் மற்றும் கிராமங்களில் மின்சாரத்தில் தன்னிறைவு அடைய செய்யும். நாங்கள் மின் உற்பத்தியை அதிகரிக்க போகிறோம். இது இறுதியில் வேலை வாய்ப்பை உருவாக்கும்.

கிரக லட்சுமி திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளோம். இது அனைத்து பெண்களுக்கும் இல்லை என்பதை தெளிவு படுத்தி உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே வழங்குவோம். பணக்காரர்களுக்கு வழங்க மாட்டோம். இந்த திட்டம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மட்டுமே கொண்டு வந்துள்ளோம்.

வேலைவாய்ப்பு முகாம்

இன்றைய பட்டதாரிகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். அவர்களின் பிரச்சினையை போக்க வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறோம். நாங்கள் பாரத் ஜோடோ உத்யோக கேந்திரா என்ற பெயரில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் வேலையின்மை குறையும்.

அரசு பஸ்சில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் அனைத்து பெண்களுக்கானது. இதில் நிபந்தனைகள் கிடையாது. ஏழை பெண்கள் மட்டும் தான் பஸ்களில் செல்கிறார்கள். அனைத்து பெண்களும் பஸ்களில் பயணம் செய்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அது மாசுபாட்டை குறைக்கும்.

மனிதனுக்கு மீனை கொடுத்தால் அவனுக்கு ஒருநாள் உணவு கிடைக்கும். அதே மனிதனுக்கு மீன்பிடிக்க கற்று கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும் என்ற பழமொழிக்கேற்ப நாங்கள் ஏழை மக்களுக்கு வலிமை கொடுக்க இந்த திட்டங்களை அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story