கேரளா: போலீசார் - மாவோயிஸ்டுகள் இடையே மோதல்


கேரளா: போலீசார் - மாவோயிஸ்டுகள் இடையே மோதல்
x
தினத்தந்தி 8 Nov 2023 7:05 AM IST (Updated: 8 Nov 2023 10:03 AM IST)
t-max-icont-min-icon

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம்,

சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், பீகார், மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மாவோயிஸ்டுகளை ஒழிக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே, கேரளா, தமிழ்நாடு வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தலப்புலாவில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு போலீஸ் சிறப்பு படையினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீது போலீசார் பதில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Next Story