புனித மண் எடுக்கும் வாகனத்துக்கு உற்சாக வரவேற்பு


புனித மண் எடுக்கும் வாகனத்துக்கு உற்சாக வரவேற்பு
x

தங்கவயலுக்கு வரும் புனித மண் எடுக்கும் வாகனத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோலார் தங்கவயல்:

பெங்களூரு விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் புனித மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோலார் தங்கவயலுக்கு புனித மண் எடுக்க வரும் வாகனத்தை வரவேற்பது குறித்து ராபர்ட்சன்பேட்டை ஜார்ஜ் மன்னர் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர் கமலநாதன், முனிசாமி எம்.பி., பா.ஜனதா மேல்சபை கொறடா நாராயணசாமி, நகரசபை கமிஷனர் மாதவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், புனித மண் சேகரிக்க வரும் வாகனத்துக்கு கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு கட்சி பாகுபாடினின்றி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.


Next Story