முகமது நபி குறித்து கட்டுரை போட்டி: தலைமை ஆசிரியர் இடைநீக்கம்


முகமது நபி குறித்து கட்டுரை போட்டி:  தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
x

முகமது நபி குறித்து கட்டுரை போட்டி நடத்திய தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நாகவி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அப்துல் முனாப் என்பவர் பணியாற்றினார். இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு தெரியாமல் முகமது நபியை பற்றி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி வைத்ததாக தெரிகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அப்துல் பரிசு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்ததும் ஸ்ரீராமசேனை அமைப்பினர் நேற்று முன்தினம் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் கல்வித்துறைக்கு தெரியாமல் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தியதாக அப்துல் முனாப்பை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை கூடுதல் கமிஷனர் சித்தராமப்பா எஸ்.பிரதார் நேற்று உத்தரவிட்டார்.


Next Story