மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
திருவனந்தபுரம்,
தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்-மந்திரிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;
மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை உடனடியாக விடுக்க வேண்டும்.நீட் தேர்வில் விலக்கு தேவை.
நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை .யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்திட வேண்டும் .அடுத்த தென்மண்டல கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்