5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு- டி.கே.சிவக்குமார் அறிவிப்பு


5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு- டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த காலஅவகாசம் வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

ஆலோசனை பெற்றேன்

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் மேயர்களுடன் ஆலோசனை நடத்தினார். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து அவர் விவாதித்தார். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவின் வளர்ச்சிக்கு நிதியை எப்படி திரட்டுவது, குறைபாடுகள் எங்கு உள்ளன, திடக்கழிவு மேலாண்மை, சாலைகளின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினேன். சாலைகளில் குப்பைகள் வீசப்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை பெற்றேன்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

குப்பை கழிவுகளை எடுத்து செல்லும் வாகனங்களை கண்டறிவது, கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினேன். பெங்களூருவை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை வருகிற 5-ந் தேதி கூட்டியுள்ளேன். அவர்களின் ஆலோசனைகளையும் பெறுவேன்.

அதன் பிறகு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தனியாக விவாதிப்பேன். 5 சதவீத தள்ளுபடியுடன் பெங்களூரு மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதற்கான காலஅவகாசம் வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுசீரமைப்பு குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதற்காக நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story