குடும்ப அரசியல் தான் காங்கிரசின் ஜனநாயகம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. தாக்கு
குடும்ப அரசியல் தான் காங்கிரசின் ஜனநாயகம் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.
உப்பள்ளி;
பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளியில் பா.ஜனதா பிரமுகர்களை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்து கலந்தாய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் ஆள் இல்லை. இன்னும் சில காலத்தில் நாட்டில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடும். காங்கிரசுக்கு சமூகநீதி, நியாயம் எதுவும் கிடையாது. குடும்ப அரசியல் தான் காங்கிரசின் ஜனநாயகம். காங்கிரசில் குடும்ப உறுப்பினர்கள் தான் தேசிய தலைவர்களாக உள்ளனர்.
பா.ஜனதாவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கிறோம். பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. மீண்டும் அவர் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை வளர்த்தவர் எடியூரப்பா.
அவரது வழிகாட்டுதலின்பேரில் பசவராஜ் பொம்ைமயின் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்போம். தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.