துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை முயற்சி
சுள்ளியாவில துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா ஜட்டிப்பல்லா கிராமத்தை சேர்ந்தவர் கேசவா பிரபு. விவசாயி. இவரது மனைவி சாந்தி பிரபு, கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி ஆவார். இந்ம நிலையில் கேசவா பிரபு நேற்றுமுன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது துப்பாக்கியால் தலையில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சுள்ளியா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கேசவா பிரபு தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.