ரெயில் மோதி விவசாயி உயிரிழப்பு


ரெயில் மோதி விவசாயி உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2022 12:15 AM IST (Updated: 25 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தூரில் ரெயில் மோதி விவசாயி உயிரிழந்தா்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பல்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகவுடா(வயது 52). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரின் இறப்புக்காக வெளியூர் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது மங்களூரு-சுப்ரமண்யா செல்லும் ரெயில் தண்டவாள பாதையை கடக்க முயன்றார். இந்த சந்தர்ப்பத்தில் தண்டவாளத்தில் ரெயில், விஜயகவுடா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறிய விஜயகவுடா பலியானார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story