மராட்டிய தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டம் - பெரும் பரபரப்பு
மராட்டிய தலைமை செயலகத்திற்குள் விவசாயிகள் கூட்டமாக புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில தலைமை செயலகம் மும்பையில் உள்ளது. இந்நிலையில், மராட்டிய தலைமை செயலகத்திற்குள் இன்று விவசாயிகள் கூட்டமாக புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சியால் ஏற்ப்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை செயலக கட்டிட மாடியில் இருந்து விவசாயிகள் கீழே குதித்தனர்.
தலைமை செயலகத்தில் வலை அமைக்கப்பட்டிருந்ததால் மாடியில் இருந்து குதித்த விவசாயிகள் அதிர்ஷ்டவசமாக வலையில் விழுந்தனர். இதனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story