காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவரை சந்தித்த பரூக் அப்துல்லா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவரை பரூக் அப்துல்லா சந்தித்தார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவர் முகமது அப்பாஸ் அன்சாரி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்சாரியை தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், எம்.பியுமான பரூக் அப்துல்லா நேற்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
2003-ம் ஆண்டு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவராக அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இவரது தலைமையிலான பிரிவினைவாத தலைவர்கள் 2004-ம் ஆண்டு அப்போது துணை பிரதமராக இருந்த எல்.கே. அத்வானியை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story