தெருநாய்களுக்கு உணவு வழங்க இளம்பெண்ணுக்கு எதிர்ப்பு


தெருநாய்களுக்கு உணவு வழங்க   இளம்பெண்ணுக்கு எதிர்ப்பு
x

தெருநாய்களுக்கு உணவு வழங்க இளம்பெண்ணுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அவ்வாறு சுற்றி திரியும் தெருநாய்களுக்கு ஒரு இளம்பெண் தினமும் உணவு வழங்கி வருகிறார். அதுபோல், நேற்று முன்தினம் இரவும் அந்த இளம்பெண் தெருநாய்களுக்கு இளம்பெண் உணவு வழங்க முயன்றார். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், இளம்பெண்ணுடன் தகராறு செய்தார்கள்.

தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடா்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story