பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம் மேலும் ஒரு நிர்வாகி நீக்கம்
நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.
புதுடெல்லி,
நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.
அவருக்கு பா.ஜனதா ஒழுங்கு நடவடிக்கை குழு எழுதிய கடிதத்தில், ''பல பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள். இதுதொடர்பான விசாரணை முடியும்வரை, நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல், டெல்லி பா.ஜனதா ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் கருத்துகள், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நுபுர் சர்மா அளித்துள்ள விளக்கத்தில், ''யாருடைய மத உணர்வுகளையும் காயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. நான் தெரிவித்த கருத்தை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.