அரசு பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய பெண் போலீஸ் சூப்பிரண்டு


அரசு பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய பெண் போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 14 Dec 2022 2:37 AM IST (Updated: 14 Dec 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் அரசு பள்ளியில் மாணவிகளுடன் பெண் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடினார். அப்போது அவர் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அறிவிரை வழங்கினார்.

சிக்கமகளூரு:-

மாணவிகளுடன் கலந்துரையாடல்

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் உமா பிரசாந்த். இவருக்கு நேற்று முன்தினம் மாலை சிக்கமகளூரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட உமா பிரசாந்த் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் மாணவிகளுடன் தனியாக கலந்துரையாடினார்.

அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசினார். அப்போது மாணவிகள் மத்தியில் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் பேசியதாவது:-

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மாணவிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். செல்போனில் தெரியாத நபர்களுடன் பேச வேண்டாம். தேவையில்லாமல் செல்போனை பயன்படுத்தி சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தைரியமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மாணவிகள் நன்கு படித்து போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு செல்ல வேண்டும். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இலக்கு நிர்ணயித்து...

ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்கவும் முடியும். எக்காரணத்தை கொண்டும் மாணவிகள் பயந்து ஒதுங்கிவிட கூடாது. தங்களின் எதிர்காலம் குறித்து மாணவிகள் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story