அரசியலமைப்பின் மதிப்பை பாதுகாக்கும் போராட்டம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும் தொடரும்; யஷ்வந்த் சின்ஹா


அரசியலமைப்பின் மதிப்பை பாதுகாக்கும் போராட்டம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும் தொடரும்; யஷ்வந்த் சின்ஹா
x

அரசியலைமைப்பின் மதிப்பை பாதுகாக்கும் போராட்டம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும் தொடரும் என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தெலுங்கானா வந்தார்.

அவரை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின்னர் சந்திரசேகர ராவ் தலைமையில் அவரது கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, அசாதாரண சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து நிலைகளிலும் நமது நாடு சிதைவடைவதை நாம் பார்த்து வருகிறோம்.

அரசியலமைப்பின் மதிப்பை பாதுகாக்கும் போராட்டம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும் தொடரும். நாம் இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வொம். நாட்டின் எதிர்காலத்திற்காகவும், அடுத்த தலைமுறைக்காகவும் நாடு சிதைவடையாமல் பாதுகாக்க போராடுவோம்' என்றார்.


Next Story