நகர்ப்புறங்களின் ஒருங்கிணைப்புக்காக 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி மானியம்


நகர்ப்புறங்களின் ஒருங்கிணைப்புக்காக 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி மானியம்
x

கோப்புப்படம்

நகர்ப்புறங்களின் ஒருங்கிணைப்புக்காக 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்கி வருகிறது. இந்த வகையில் 2022-2023-ம் ஆண்டுக்காக ரூ.4,761.80 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்துக்கு இதுவரை ரூ.14.70 கோடி கிடைத்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆந்திரா, உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

தனித்தனி அளவுகோல்களில் ஆந்திராவுக்கு ரூ.136 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு ரூ.720 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.799 கோடியும், சத்தீஸ்கார் மாநிலத்துக்கு ரூ.109 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.


Next Story