மாயமான நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் சன்மானம்
மாயமான நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு பசவேஸ்வராநகர் பகுதியில் குருபிரியா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி குருபிரியா தனது நாயுடன் சேர்ந்து நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் போனது.
நாயை பல்வேறு இடங்களில் குருபிரியா தேடிப்பார்த்தார். ஆனால் இன்னும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் குருபிரியா, சமூக வலைத்தளங்களில் தான் வளர்ந்து வந்த நாயின் புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார். அந்த நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story