டெல்லி- பாரகாம்பா சாலையில் உள்ள கட்டிடத்தின் 9வது மாடியில் திடீர் தீ விபத்து
இந்த தீ விபத்தால் பரகாம்பா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய டெல்லியில் பல அலுவலகங்களை கொண்ட கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை 6.30 மணியளவில் பாரகாம்பா சாலையில் உள்ள டிசிஎம் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைத்தனர். தீ விபத்தால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இரவு 8 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் பரகாம்பா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story