மத்தியபிரதேசத்தில் 2 ரெயில்களில் தீ விபத்து


மத்தியபிரதேசத்தில் 2 ரெயில்களில் தீ விபத்து
x

கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் 2 ரெயில்களில் தீ விபத்து ஏற்பட்டது.

போபால்,

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூர் நகரில் இருந்து மத்தியபிரதேசத்தின் கஜுராஹோ நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் மத்தியபிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சிதோலி ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ரெயில் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் என்ஜினில் எரிந்த தீயை அணைத்தனர்.

அதனை தொடர்ந்து வேறு என்ஜின் மாற்றப்பட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் ரெயில் 3 மணி நேரம் தாமதமானது. இதேபோல் ஐதராபாத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்று, மத்தியபிரதேசத்தின் சிந்த்வாரா நகருக்கு அருகே சென்றபோது ரெயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, அங்குள்ள பந்தூர்னா ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு ரெயிலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அரை மணி நேர தாமதத்துக்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story