புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி...!


புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி...!
x

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் தீபாவளி அன்று காலை 6 - 7 மணி, இரவு 7 - 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என புதுச்சேரி கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story