டெல்லி கோர்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு - காரணம் குறித்து போலீசார் விசாரணை
வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக கோர்ட்டு வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷவடசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் பின்னர் சிறிது நேரத்தில் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story