மைசூரு மாநிலத்தின் முதல் சட்டசபை தேர்தல் -கண்ணோட்டம்


மைசூரு மாநிலத்தின் முதல் சட்டசபை தேர்தல் -கண்ணோட்டம்
x
தினத்தந்தி 30 March 2023 4:09 AM IST (Updated: 30 March 2023 11:25 AM IST)
t-max-icont-min-icon

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மைசூரு மாநிலத்தின் முதல் சட்டசபை தேர்தல் 1952-ம் ஆண்டு நடந்தது. மைசூரு மாநிலம் 80 தொகுதிகளை கொண்டிருந்தது. அப்போது இரு உறுப்பினர்களை கொண்ட தொகுதி 19-ம், ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதி 61-ம் இருந்தன. மொத்தம் 99 உறுப்பினர்களை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, கிஷன் மஸ்த்தூர் பிரஜா கட்சி, சமூகநீதிக்கட்சி, ஆதிதிராவிடர் கூட்டமைப்பு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறங்கின. மேலும் சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டினர்.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ் 99 உறுப்பினர் பதவிகளில் 74 உறுப்பினர் பதவியை கைப்பற்றியது. கிஷான் மஸ்த்தூர் பிரஜா கட்சி 59 உறுப்பினர் பதவிகளில் போட்டியிட்டு 8 உறுப்பினர் பதவியை மட்டுமே கைப்பற்றியது. 47 உறுப்பினர் பதவிகளில் போட்டியிட்ட சமூகநீதி கட்சி 3-லும், 7 உறுப்பினர் பதவிகளில் போட்டியிட்ட ஆதிதிராவிடர் கூட்டமைப்பு 2-லும், 5 உறுப்பினர் பதவிகளில் களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1-லும் வெற்றி பெற்றன. மேலும் 99 பதவிகளுக்கு

மொத்தம் 154 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் சுயேச்சை வேட்பாளர்கள் 11 பதவிகளை கைப்பற்றினர்.

தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த காங்கிரசை சேர்ந்த கே.செங்கலராய ரெட்டி என்கிற கே.சி.ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். இவர் அன்றைய மைசூரு மாநிலத்தின் (கர்நாடகம்) முதலாவது, முதல்-மந்திரி என்ற பெருமை பெற்றார். அவருக்கு அடுத்து கெங்கல் அனுமந்தய்யா 2-வது முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இவர் 1952-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி முதல் 1956-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி வரை முதல்-மந்திரி பதவி வகித்தார்.

இவரை தொடர்ந்து கடிதால் மஞ்சப்பா 1956-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை பதவி வகித்தார். அதன்பிறகு 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி எஸ்.நிஜலிங்கப்பா 4-வது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். முதல் சட்டசபை ஆட்சி காலத்தில் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரிந்துகிடந்த கன்னடமொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து மைசூரு மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story