ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய ஐ2யூ2 குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீடு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் ஐ2யூ2 மாநாட்டில் உக்ரைன் போரினால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள உணவு, எரிபொருள் பற்றாக்குறை விவாதிக்கப்பட உள்ளது. மேலும், வர்த்தகம், முதலீடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story