முதலில் அமலாக்கத்துறைக்கு சரியாக பதிலளியுங்கள் - ராகுல்காந்திக்கு அனுராக் தாக்கூர் பதிலடி
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லரவல்ல என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனிதவளத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி அடுத்த 1.5 ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேரை பணியத்த அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லவரல்ல. வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை உருவாக்குவதில் மட்டுமே வல்லவர். 8 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து இளைஞர்கள் ஏமாற்றப்பட்டது போன்று தற்போது 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று ஏமாற்றப்படுகின்றனர். இது பொய்யான வாக்குறுதி கொடுக்கும் அரசாங்கமல்ல மிகப்பெரிய பொய் வாக்குறுதி கொடுக்கும் அரங்சாங்கம்' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூரிடம் ராகுல்காந்தியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு முதலில் சரியான பதில்களை அளிக்கும்படி ராகுல்காந்தியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் நீங்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் 2 நாட்களாக உங்களிடம் நடத்தப்படும் விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த முடிவை வரவேற்பதற்கு பதில் ராகுல்காந்தி மற்ற விவகாரங்களில் பரபரப்பாக உள்ளதால் இந்த முடிவு குறித்த மகிழ்ச்சியை அவரால் வெளிப்படுத்தமுடியவில்லை' என்றார்.
மேலும் படிக்க... வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லவரல்ல - ராகுல்காந்தி விமர்சனம்