வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 200 கோடி நிதியுதவி - மத்திய அரசு அறிவிப்பு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 200 கோடி நிதியுதவி  - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 3:18 PM IST (Updated: 20 Aug 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

சிம்லா,

இமயமலை பிரதேசங்களான இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன

இமாச்சலபிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டியது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளன. அத்துடன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன .

வரலாறு காணாத மழை, வெள்ளம், மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story