பஞ்சாப்பில் கனமழை: 2.40 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசம்
பஞ்சாப்பில் கனமழை காரணமாக 2.40 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்,
டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்தியாவில் 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜூலை 19ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் கனமழையால் 2.40 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story