அரசு கல்லூரி வளாகத்தில் குவிந்த உணவு கழிவுகள்


அரசு கல்லூரி வளாகத்தில் குவிந்த உணவு கழிவுகள்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரசு கல்லூரி வளாகத்தில் குவிந்த உணவு கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு:-

சித்ரதுர்கா மாவட்டத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான ஒற்றுமை மாநாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முருகராஜேந்திரா மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு சித்ரதுர்கா டவுன் பகுதியில் உள்ள அரசு அறிவியல் கல்லூரியில் உணவு வழங்கப்பட்டது. மாநாடு முடிந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் எங்கு பார்த்தாலும், உணவு, டீ கப் மற்றும் காகித கழிவுகளாக கிடக்கிறது. சில பகுதிகளில் அந்த கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி திறக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். அப்போது வளாகத்தின் அவல நிலையை கண்டு மூக்கை மூடி கொண்டு மாணவர்கள் சென்றனர். குவிந்து கிடந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசியது. மேலும், உணவு கழிவுகளுக்காக தெருநாய்கள் சுற்றித்திரிவதால், மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் நடத்திய மாநாட்டிற்கு பிறகு, அந்த பகுதியை தூய்மைபடுத்துவதற்கு கூட அவர்களுக்கு நேரமில்லாமல் போனதாக அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Next Story