கொரோனா உபகரண பொருட்கள் வழங்கியதற்கான ரூ.75 லட்சத்தை உடனே விடுவிக்க வேண்டும்


கொரோனா உபகரண பொருட்கள் வழங்கியதற்கான ரூ.75 லட்சத்தை உடனே விடுவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:30 AM IST (Updated: 4 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் அந்த பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி் பிரபுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;- கடந்த 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்று சமயத்தில் கிராம பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்தினருக்கு முககவசம் உள்பட பல்வேறு பாதுகாப்பு உபகரண பொருட்களை விற்பனை செய்துள்ளேன். ஆனால் அதற்கான தொகையான ரூ.75 லட்சத்தை இதுவரை எனக்கு வழங்கவில்லை.

அந்த பணத்தை தனக்கு கொடுக்கும் படி பலமுறை தாலுகா மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் தற்போது வரை அந்த பணத்தை அவர்கள் எனக்கு தரவில்லை. இதனால் எனக்கு வர ேவண்டிய பணத்ைத உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்த மனுவை பெற்றுகொண்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story