ராகுல்காந்தி பாதயாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் குழுக்கள் அமைப்பு
ராகுல்காந்தி பாதயாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கன்னியாகுமாியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வரும் போது, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும், கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்தவும் தனிக்குழுக்களை மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அமைத்திருக்கிறார்.அதன்படி, ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, பாதயாத்திரையின் பிரசார குழு பொறுப்பாளராக ராமலிங்க ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதயாத்திரையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தடுக்கும் பொறுப்பு முன்னாள் மந்திரி ரேவண்ணாவுக்கும், தினமும் நடைபெறும் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு கிருஷ்ண பைரேகவுடாவுக்கும், பாதயாத்திரையில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு தினேஷ் குண்டுராவுக்கும், மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட பாதயாத்திரையை நிர்வகிக்கும் பொறுப்பு துருவநாரயாணுக்கும், மைசூரு நகர பொறுப்பு மகாதேவப்பாவுக்கும், துமகூரு மாவட்ட பொறுப்பு பரமேஸ்வருக்கும், இதுபோன்று ஒவ்வொரு மாவட்டம், பிற நிகழ்ச்சிகளுக்கான பொறுப்புகளை நிர்வகிக்க தனிக்குழுக்களையும் அமைத்து மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.