தமிழக தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.6,804 கோடி வெளிநாட்டு நன்கொடை - மாநிலங்களவையில் தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.6,804 கோடி வெளிநாட்டு நன்கொடை கிடைத்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
2019-2020 நிதிஆண்டு முதல் 2021-2022 நிதிஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.55 ஆயிரத்து 645 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
அவற்றில், அதிக அளவாக டெல்லியில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 62 கோடி கிடைத்துள்ளது. கர்நாடகா, மராட்டிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 804 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story