முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு மீண்டும் கொரோனா
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் அது மீண்டும் ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு முறை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமாரசாமி, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story