அரியானா: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. காலமானார்


அரியானா: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. காலமானார்
x

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சண்டிகர்,

அரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராம் பிரகாஷ் (வயது 84). இவர் 2007 முதல் 2014 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, ராம் பிரகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக குருஷேத்ரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்.பி. ராம் பிரகாஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராம் பிரகாஷின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.


Next Story