புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார்
கண்ணனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனிடையே, கண்ணனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
புதுச்சேரி அரசியலில், காங்கிரஸ் கட்சியில் இருந்த கண்ணன், சபாநாயகர், அமைச்சர், எம்.பி., என முக்கிய பதவிகள் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story