பட்டம் விடும் விழாவில் சோகம்: மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 வயது சிறுவன் பலி


பட்டம் விடும் விழாவில் சோகம்: மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 வயது சிறுவன் பலி
x

வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

காந்திநகர்,

வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. குஜராத்தில் மகர சங்கராந்தி உத்தரயான் பண்டிகை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக பட்டம் விடும் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் குஜராத்தின் மஹிசாகர் மாவட்டம் கோதம்பா பகுதியில் உள்ள போரடி கிராமம் அருகே இன்று பட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பட்டம் விட்டனர்.

அப்போது, அங்குள்ள சாலையில் ஒரு நபர் தனது 4 வயது மகன் தரூன் மச்ஹியை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். சிறுவன் தரூனை அவரது தந்தை பைக்கின் முன் இருக்கைக்கு முன்னே பெட்ரோல் டேங்க்கில் அமர வைத்திருந்தார்.

பைக் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை அறுத்தது. மாஞ்சா நூல் அறுத்ததில் சிறுவனின் கழுத்தில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றார். ஆனால், சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story